லிங்கன் மாணவர் விடுதியில் வசியுங்கள்

நண்பர்களை தேடிக்கொள்வது முதல் கல்லூரி வாழ்க்கைக்குள் சுமுகமான பிரவேசம், தீவிர வாரந்தர படிப்புப் பயிற்சிகள் மூலம் பல்கலைக்கழக பட்டம் பெற உதவி பெற்றுக்கொள்ளுதல் வரையிலானவற்றை அனுபவிக்க, லிங்கன் மாணவர் விடுதி அடிலெய்டில் வந்து வசியுங்கள்.

தலைமைப்பண்பு, தொழிற்பயிற்சி மற்றும் தொழில்தகைமை மேம்பாட்டுக்கான வாய்ப்புகள், விரிவான உலகளாவிய முன்னாள் மாணவர்கள் வலயம் போன்ற பல்வேறு வசதிகளை வழங்குவதன் மூலம் நீங்கள் பட்டம் பெற்றபின் உங்கள் துறையில் தொழிலை தொடங்குவதற்கு மற்றைய விண்ணப்பதாரிகளைவிட முன்னிலை தராதரங்ககளை உங்களுக்கு பெற்றுத்தருவதில் எங்கள் மாணவர் விடுதி கவனம் செலுத்துகிறது.

பல்லின கலாச்சார, பல் சமய மற்றும் நட்புக்கு பெயர்போன எங்கள் சமூகம், ஆதரவு மற்றும் களிப்பூட்டும் சூழலை உங்களுக்கு வழங்கி நீங்கள் பல்கலைக்கழகத்தில் வெற்றிபெற வழிவகுக்கிறது. எங்கள் விடுதியில் வசிக்கும் மாணவர்கள் படிப்புக்கு முக்கியத்துவமளிக்கிறதோடு சுறுசுறுப்பான சமூக வாழ்க்கையும் வாழ்பவர்கள். இங்கு வசிப்பவர்கள் சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் இருப்பதை உறுதிப்படுத்த நாங்கள் தொடர்ந்து முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், அடிலெய்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஃபிலிண்டர்ஸ் பல்கலைக்கழகங்களில் படித்துக்கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பாகங்களை மற்றும் வெவ்வேறு உலக நாடுகளை சேர்ந்த மாணவர்கள் லிங்கன் மாணவர் விடுதி அடிலெய்ட்டில் தங்க தெரிவு செய்வதினால் நீங்கள் பல்வேறு கலாச்சாரங்களை கண்டுணர்ந்து கொள்வதோடு அனைவரையும் அரவணைக்கும் சமூகத்தையும் காண்பீர்கள்.

Live at Lincoln

கல்வி உதவிநிதிக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 2020 இலிருந்து வரவேற்கப்படும். 2021 ஆம் வருடத்தில் குறிப்பிட்ட அளவான மாணவர்கள் தங்குமிடங்களே காலியாக உள்ளன. உங்கள் வாய்ப்பை தவறவிடலாமல் இன்றைக்கே விண்ணப்பம் செய்யுங்கள்.

நீங்கள் அடிலெய்டில் மாணவர் விடுதியை தேடுபவரானால் லிங்கன் விடுதியே உங்களுக்கு ஏற்ற இடமாக இருக்கலாம்.

சாப்பாட்டு வசதிகள்

மாணவர் தங்குமிட வசதிகள் மட்டுமன்றி, இன்னும் பலவற்றை லிங்கன் உங்களுக்கு அளிக்கிறது.

ஒரு நாளுக்கு மூன்று வேளை சாப்பாடு வழங்கப்படுவதோடு வாரத்துக்கு ஐந்து முறை (ஞாயிறு-வியாழன்) இரவு சிற்றுண்டியும் உங்களுக்கு வழங்கப்படும். உங்களுக்கு வழங்கப்படும் உணவுகள் சரிவிகித மற்றும் போஷாக்கான உணவுகளாக இருப்பதோடு வெவ்வேறு மாமிச உணவுகள், சாலடுகள், மரக்கறி/சைவ மற்றும் வீகன் உணவு வகைகளையும் நீங்கள் தெரிவு செய்து உண்ணலாம். பகல் உணவு நேரத்தில் பல்கலைக்கழகத்தில் இருக்கப்போகிறீர்களா? கவலை வேண்டாம். லிங்கனில் வசிப்பவர்கள் காலையில் சன்ட்விச் செய்து பல்கலைக்கழகத்துக்கு எடுத்துச்செல்லலாம். விரிவுரை, டியூடோரியல், விளையாட்டு பயிற்சி அல்லது படிப்பு சம்பந்தமான விஷயம் காரணமாக இரவு சாப்பாட்டுக்கு வரமுடியாவிடில் சமையலறைக்கு தெரியப்படுத்தவும். அவர்கள் உங்களுக்காக சாப்பாட்டை வைத்திருப்பார்கள்.

தலைசிறந்த கல்வி ஊக்கம்

எங்கள் முதல்வர் மற்றும் மூத்த பயிற்சி துணைவர்களால் நிர்வகிக்கப்படும் எங்களது விரிவான கல்வி செயல்முறைத்திட்டமானது பின்வருவனவற்றை உள்ளடக்கியது: சிறுகுழு கல்வி பயிற்சி, தனிநபர் ஆலோசனை கோரல், கருத்தரங்குகள், அறிவுரை பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சிகள் மற்றும் தொழில்தகைமை மேம்பாடு நடவடிக்கைகள். இங்கு தங்கியிருப்பவர்களை கொண்ட இக்கல்விக் குழுவானது பல்கலைக்கழக கல்விக்கு உதவுகின்ற ஊக்கமளிப்புகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுசார் வழிகாட்டுதல்கள் போன்றவற்றை வழங்குகின்றது.

பல்கலைக்கழக வாழ்க்கைக்கு உங்களை தயார்படுத்திக்கொள்ள உதவிகள்

பல்கலைக்கழக படிப்பை துவங்குவது வாழ்க்கையின் ஒரு பெரிய மற்றும் உற்சாகமான படியாகும். அடிலெய்ட் பல்கலைக்கழகமொன்றில் படிப்பை சுமுகமாக துவங்குவதற்கு உதவுவதற்காக புதிதாக சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு வருடத்துக்கு ஒருமுறை, பல்கலைக்கழக கல்விக்கு விரிவான அறிமுகம் வழங்கப்படும். மாணவர்கள் மேல்நிலை படிப்பிலிருந்து பல்கலைக்கழக கல்வி முறைக்கு மாறிக்கொள்வதற்கு உதவி செய்வதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இங்கு ஒழுங்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பொது குறிப்புகள் மற்றும் பாடம் சம்பந்தமான பின்வரும் தகவல்களும் வழங்கப்படும்:

  • திறமையாக சுயமாய் கல்வி பயிலும் பழக்கங்களையும் ஆற்றல்களையும் விருத்திசெய்தல்
  • விரிவுரைகளுக்கு எங்களை தயார் செய்துகொள்ளல்
  • டியூடோரியல்கள் மற்றும் பரிசோதனைக்கூட செயற்பாடுகள்
  • கட்டுரை எழுதுதல் மற்றும் பட்டபடிப்புக்கேற்ற சான்றாதாரம் மற்றும் மேற்கோள் காட்டல்
  • நேர நிர்வாகம் மற்றும் ஒழுங்கமைப்பு திறமைகள்
  • பரீட்சைகளுக்கு தயார்படுத்தல்
  • ஊக்கப்படுத்தல்

பட்டப்படிப்பில் சிறந்து விளங்க தேவையான திறமைகள், தகவல்கள், மற்றும் வசதிகள் உள்ளன என்பதனை உறுதி செய்வதற்காக இங்கு புதிதாக வந்து தங்குபவர்கள் அனைவருக்கும் முதலாம் தவணையின் ஆரம்பத்தில் “கண்டறியும் சோதனை”செய்யப்படுகிறது.

தொழில்தகைமை மேம்பாடு

இன்றைய போட்டியான வேலைவாய்ப்பு சூழ்நிலையில் நமக்கு பிடித்த சிறப்பான வேலையை பெற்றுக்கொள்ள பட்டம் பெறுவது மட்டும் போதாது. லிங்கனில் வழங்கப்படும் பல்வேறு தலைமைத்தகைமை வாய்ப்புகள் உங்களை வேலைக்கு தயார்ப்படுத்துவதோடு உங்கள் தற்குறிப்பை (ரெசுமே) மேம்படுத்தவும் செய்யும். மேலும் எங்கள் பழைய மாணவர் வலையமைப்பின் மூலம் உலகளாவிய ரீதியில் நீங்கள் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கும். லிங்கன் லிங்க்ஸ் எனும் எங்கள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் தொழில்சார் சந்திப்புகள், லிங்கன் வாசிகளுக்கு அனுபவமிக்க மற்றும் தங்கள் துறைகளில் ஏற்கனவே சித்தியடைந்துள்ளோரோடு தொடர்புகொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும். இந்நிகழ்ச்சிகள் தொழிற்றுறைகளில் புதிய அறிமுகங்களை ஏற்படுத்துவதுடன் அறிவு பரிமாறலுக்கு வழிகோலி வெற்றிகரமான தொழில்களை ஆரம்பிக்கவும் துணைபுரிகிறது.

Live at Lincoln

லிங்கன் வாசிகளின் நலன்

லிங்கன் வாசிகளின் சந்தோஷமும் நலனும் இந்த லிங்கன் மாணவர் விடுதி அடிலெய்ட் வாழ்க்கையின் மையமாகும். இங்கு வசிக்கும் காலகட்டத்தில் எல்லா மாணவர்களும் பாதுகாப்பாகவும் இச்சமூகத்தின் ஒருவராக உணருவதையும் உறுதிசெய்ய, இங்கு தங்கிவாழும் ஊழியர்கள் மற்றும் ஆலோசகர்கள் உள்ளடக்கிய ஆதார சேவைகள் உள்ளன. லிங்கன் வாசிகள் ஆரோக்கியத்துடனும் உடல்பெலத்துடனும் இருப்பதற்கு வாய்ப்புகளை வழங்குவதுடன் அவர்கள் நடைமுறைக்கு உகந்த மீண்டெழுந்தண்மை திறன்களை விருத்தி செய்து அவற்றை வெளிப்படுத்தவும், வளைந்துகொடுத்து சமாளிக்கும் தண்மைகளை விருத்தி செய்யவும், வாழ்க்கையை நேர்மறையான கண்ணோட்டத்துடன் நோக்கும் இயல்புகளையும் விருத்தி செய்து பல்கலைகழக படிப்பின் பின் வேலை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.

தங்கிவாழும் ஊழியர்கள்

எந்நேரமும் மிகவிரைவில் உதவி பெற்றுத்தருவதை உறுதி செய்ய, முதல்வர் உட்பட தங்கிவாழும் நிர்வாகிகள் லிங்கனிலேயே தங்கி வாழுகிறார்கள்.எங்கள் முதல்வர் கலாநிதி ஜோர்டன் பெல் ஒரு பயிற்சிபெற்ற மனநலநிபுணர் மட்டுமில்லாமல் மீண்டெழுந்தன்மையில் முனைவர் பட்டம் பெற்றவரும் இளவயதினர் மனநல நிபுணத்துவம் பெற்றவரும் ஆவார்.

பாதுகாப்பு

எந்நேரமும் விரைவில் உதவி பெற்றுத்தருவதை உறுதி செய்ய, முதல்வர் உட்பட நிர்வாகிகள்
லிங்கனிலேயே தங்கி வாழுகிறார்கள். கடமை ஆலோசகர் ஒருவர், அலுவலக நேரங்களுக்கு அப்பால் ஏற்படக்கூடிய அவசர தேவைகளுக்கும், நீங்கள் வளாகத்துக்கு உள்ளேவரமுடியாதபடி அடைபட்ட சூழ்நிலைகளில் உதவிசெய்யவும் பணியில் இருப்பார். எங்கள் எல்லா கட்டிடங்களும் மாஸ்டர் சாவி கொண்ட முறை மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அடிலெய்ட் பல்கலைகழகத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் பல்கலைக்கழக அலுவல் நேரங்களுக்குப்பின் வளாகத்தை ரோந்து செய்வார்கள். கொடுமைப்படுத்தல், பகிடிவதை, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை என்பவற்றை குறித்து லிங்கன் கல்லூரியானது முற்றிலும் பொறுத்துக்கொள்ளாத நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இங்கு வசிப்பவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ஊழியர்களுக்கும் இங்கு வசிப்பவர்களுக்கும் பயிற்சியும் கல்வியும் வழங்குகிறோம். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அடிலெய்ட் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பான கல்லூரி சமூக திட்டம் பல சேவைகளை வழங்குகிறது. இதே போன்று தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் மரியாதை.இப்பொழுதும்.எப்பொழுதும். எனும் இணையதள இணைப்பு மாணவர்களின் பாதுகாப்பு பற்றிய தகவல்களையும் மாணவர் நலன் தகவல்களையும் வழங்குகிறது. ஃபிலிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்கள் மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பாக வைத்திருத்தல் எனும் இணையதள இணைப்பில் உள்ளது.

வதிவிட ஆலோசகர்கள்

எங்கள் நலம்பேணும் பணியின் மையமாக எங்கள் வதிவிட ஆலோசகர்கள் உள்ளார்கள். அவர்கள் தங்கள் வசிக்கும் இடத்தை சுற்றியுள்ள இடங்களுக்கு பொறுப்பாயிருப்பார்கள். அவர்கள் குடியிருப்பாளர்கள் மத்தியில் வசிப்பதால் குடியிருப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து முதல்தர விவரங்களை பெற்று கொள்ள ஏதுவாயிருக்கும். லிங்கனின் வாழும் ஒவ்வொரு மாணவரினதும் நலம் பேணும் பொருட்டு இந்த ஆலோசகர்கள் தலைமைத்துவம், சமூக விருத்தி, முதலுதவி (உடல், மன), பாலியல் வன்முறை தடுப்பு, சச்சரவு தீர்த்தல், சமவாய்ப்பு வழங்குதல், தீ அபாய பாதுகாப்பு என்பவற்றில் பயிற்சி பெற்றவர்கள். எல்லா மாணவருக்கும் வழிகாட்டுதல் எனும் முக்கிய பணியை பூர்வீக குடிமக்கள் ஆலோசகரும் செய்வார்.

நிகழ்வுகளும் செயல்களும்

லிங்கனின் சில சிறப்பான சமூக நிகழ்வுகள் எப்பொழுதுமே பிரசித்தமானவைகள். இவற்றில் இலவசமாக கலந்துகொள்ளலாம் என்பது முக்கிய விவரம்!

ஆரம்ப வாரம் (O’ வீக்), சர்வதேச இரவு, இன்னிசை இரவு, லிங்கன் களியாட்டம், இறுதி/பிரியாவிடை இராப்போசனம் போன்றவை குறிப்பிடத்தக்க சில நிகழ்வுகளாகும்.

SAAUCCன் (தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக கல்லூரி கழகங்களின் சங்கம்) முனைப்பான உறுப்பினரான லிங்கன் நீச்சல், ஹோக்கி, கால்பந்து, ரக்பி, மேசைப்பந்து, விவாத போட்டி, கூடைப்பந்து உட்பட இன்னும் பலவற்றில் போட்டியிடுகிறது.

உங்கள் திறமை எதுவானாலும், பல்வேறு விளையாட்டு, கலாச்சார, சமூக செயல்களில் கலந்துகொள்ள உங்களை ஊக்குவிக்கிறோம். எல்லாவித திறமையுடையவர்களும் வரவேற்கப்படுகிறார்கள். மற்றும் ஆதரவாளர்களையும், பார்வையாளர்களையும் விளையாடும் இடங்களுக்கு வந்து எங்களை ஊக்குவிக்கும்படி வரவேற்கிறோம். லிங்கன் மாணவர் விடுதி அடிலெய்ட்டில் ஒவ்வொருவருக்கும் கலந்துகொள்ள ஏதாவதொரு செயல் உண்டு.

லிங்கனில் நடக்கும் செயல்களை பற்றி சிறிது அறிந்துகொள்ள 2017ன் எங்கள் அபிமான நினைவுகளை பாருங்கள்.

2018ன் O’ வாரத்திலிருந்து சில பதிவுகள்

லிங்கனின் மாணவர் விடுதி அடிலெய்ட்

தரமான மாணவர் தங்கும் வீடு வசதிகளை லிங்கன் வழங்குகிறது. லிங்கனின் மாணவர் விடுதி அடிலெய்ட் பற்றிய மேலதிக விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் காலத்தில் உங்களுக்கொத்த மாணவர் தங்கும் வீட்டையும் மாணவர் தங்கும் விடுதியையும் தேடிக்கொள்வது ஒரு முக்கியமான விடயமாகும். நீங்கள் அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில், தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் அல்லது ஃபிலிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலுகிறீர்கலாயினும் தங்குமிட வசதியை தேடிக்கொள்வது, உங்கள் பல்கலைக்கழக வாழ்கை அனுபவத்தையும் நீங்கள் பட்டம் பெறுதலையும், மற்றும் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புக்களையும் பாதிக்கக்கூடிய ஒரு முடிவாகும்.

லிங்கனில் நாங்கள் வழங்கும் தங்குமிட வசதிகள் உங்களை முன்னிலையில் வைக்கும். உங்கள் கல்வி இலக்குகளை அடையவும், உங்களுக்கு பிடித்த சிறப்பான வேலையை பெற்றுக்கொள்ளவும், இந்த இலக்குகளை நீங்கள் மகிழ்ச்சியுடன் சென்றடைய உதவிசெய்யும் குறிக்கோளுடன் நங்கள் உள்ளோம்.

சமூகம், நலன், எங்கள் மாணவர்களுக்கான சமூக மற்றும் கல்வி உதவி, எங்கள் நோக்காகும்.

லிங்கன் மாணவர் தங்கும் வீடுகளின் விலைக் கட்டணங்கள்

அடிலெய்ட்டில் மாணவர் தங்கும் வீடுகளின் கட்டணங்கள் ஆஸ்திரேலியாவின் மற்றய மாநிலங்களுடன் ஒப்பிடும்பொழுது கட்டுப்படியானது. உங்களுக்கான பிரத்தியோக படிப்பறை மற்றும் மற்றவர்களுடன் பகிர்ந்து பாவிக்கும் வசதிகளுடன்கூடிய, எங்கள் சகலமும் உள்ளடக்கிய மாணவர் தங்குமிட கட்டணங்கள், உங்கள் பணத்திற்கு அதி சிறந்த மதிப்பை வழங்குவதோடு எல்லா வேளை சாப்பாட்டுக் கட்டணங்கள், தளபாடங்கள், அருகலை (வை ஃபை) இணைய சேவை மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. லிங்கன் மாணவர் விடுதி அடிலெய்டில் வசியுங்கள்.

Live at Lincoln

உங்கள் மாணவர் தங்கும் வீடு தேடல் இப்போதே முடிவடையலாம்.

லிங்கன் தெற்கு ஆஸ்திரேலிய மாணவர் தங்குமிட சங்க (SAASA) உறுப்பினர். இச்சங்கத்தின் உறுப்பினர்களால் வழங்கப்படும் மாணவர் தங்கும் வீடுகள் பாதுகாப்பான, சுத்தமான மற்றும் மேற்பார்வை செய்யப்பட்ட தங்குமிடங்கள் என சிபாரிசு செய்யப்பட்ட இடங்களாகும். மாணவர் தங்குமிடம் அடிலெய்ட்டை பற்றி யோசியுங்கள். லிங்கனை நினையுங்கள்.